பிற விளையாட்டு

32 அணிகள் பங்கேற்கும் மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னையில் இன்று தொடக்கம் + "||" + 32 teams will participate State Handball Competition Start in Chennai today

32 அணிகள் பங்கேற்கும் மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

32 அணிகள் பங்கேற்கும் மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதலாவது மாநில ஹேண்ட்பால் போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதலாவது மாநில ஹேண்ட்பால் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, சேலம், கோவை, சென்னை உள்பட 32 மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. ‘நாக்–அவுட்’ முறையில் போட்டி நடைபெறுகிறது. தொடக்க விழாவில் இந்திய ஹேண்ட்பால் சம்மேளன தலைவர் எம்.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளர் ஏ.சரவணன் தெரிவித்தார்.