பிற விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் + "||" + Gun Shooting 2 more medals for India

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

சாங்வான், 

52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது.

இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4–வது இடம் வகிக்கிறது.