பிற விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் + "||" + Ekta Bhyan wins club throw gold for India at Asian Para Games

ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் பிரிவு கிளப் த்ரோ (தடி வீசுதல்) போட்டியில் இந்தியாவின் ஏக்தா பியான் 4வது முயற்சியில் 16.02 மீட்டர் தொலைவுக்கு சிறந்த முறையில் தடி எறிந்து தங்கம் வென்றார்.

இந்த வருட தொடக்கத்தில் நடந்த இந்தியன் ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நிலையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அவர் பெற்றார்.

இன்று நடந்த 3 போட்டிகளில் இந்தியாவின் ஜெயந்தி பெஹேரா, ஆனந்தன் குணசேகரன் மற்றும் மோனு கங்காஸ் ஆகியோர் இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கங்களை பெற்று தந்தனர்.