பிற விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார் + "||" + Junior Olympic Games: manu bhaker won the silver medal

இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்

இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்
இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்.
பியூனஸ் அயர்ஸ்,

3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில், சர்வதேச கலப்பு பிரிவின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தஜிகிஸ்தானின் பெஜான் பாய்ஜூல்லாவுடன் இணைந்து, வானிசா சீஜெர் (ஜெர்மனி), கிரில் கிரோவ் (பல்கேரியா) ஜோடியை சந்தித்தார். இதில் மானு பாகெர்- பெஜான் கூட்டணி 3-10 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. அரியானாவைச் சேர்ந்த 16 வயதான மானுபாகெர் இந்த போட்டியில் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர்பிஸ்டல் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று இருந்தார். ஆண்களுக்கான ஆக்கியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்தது.