பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
அகில இந்திய கைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி அணி, அண்ணா பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது

*இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 62–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1–0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தி 8–வது வெற்றியை பெற்றதோடு புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு (27 புள்ளி) முன்னேறியது. பெங்களூரு அணி இந்த சீசனில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

* கான்பூரில் நடந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான அகில இந்திய கைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி அணி 25–22, 28–30, 25–23, 25–19 என்ற செட் கணக்கில் அண்ணா பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

*வேலம்மாள் குழுமத்தின் ஆதரவுடன் பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று முதல் 4–ந்தேதி வரை நடக்கிறது. 11 சுற்று கொண்ட இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7½ லட்சம் ஆகும். இதில் முதலிடம் பிடிக்கும் வீராங்கனைக்கு ரூ.1½ லட்சம் பரிசாக வழங்கப்படும்.

* திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய ஏ அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் கேப்டன் ரணதுங்கா தோல்வி அடைந்தார்.
2. துளிகள்
சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசத்தை பாதுகாக்கும் ராணுவத்தினரே உண்மையான ஹீரோக்கள். அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நான் இதயபூர்வமாக துணை நிற்கிறேன்.
3. துளிகள்
ஐ.-லீக் கால்பந்து தொடரில் ஸ்ரீநகரில் இன்று நடக்க இருந்த ரியல் காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட நடப்பு சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணி மறுத்தது.
4. துளிகள்
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
5. துளிகள்
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...