துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 5 Feb 2019 9:45 PM GMT (Updated: 5 Feb 2019 6:49 PM GMT)

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா சுற்று ஆட்டம் இன்று கஜகஸ்தானில் தொடங்குகிறது.


* யுகம் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி கோவையில் உள்ள குமரகுரு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணி 25-17, 25-15 என்ற நேர்செட்டில் பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரி (கோவை) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா சுற்று ஆட்டம் இன்று கஜகஸ்தானில் தொடங்குகிறது. 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 7 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. கஜகஸ்தான், தாய்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்த போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் அணி உலக குரூப் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெறும். இந்திய அணியில் அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர், விஷால் உப்பல், பிரார்த்தனா தோம்பரே, மஹாக் ஜெயின், ரியா பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

* 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

* சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ரவுண்ட் ராபின் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை 13 வயதான திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் 11-வது மற்றும் கடைசி சுற்றில் திவ்யா, சக நாட்டவரான சந்த்ரேயீ ஹஜ்ராவை தோற்கடித்து 8 புள்ளியுடன் முதலிடத்தை உறுதி செய்தார். அவருக்கு ரூ.1½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.


Next Story