துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 23 May 2019 11:04 PM GMT (Updated: 23 May 2019 11:04 PM GMT)

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


* ‘ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தக்க வைக்குமா? என்பது அவர்கள் சுழற்பந்து வீச்சை எப்படி திறம்பட சமாளிக்கிறார்கள், தங்களிடம் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி பயன்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

* இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாட்டிங்காம்ஷைர் அணிக்காக களம் காணும் அவர் இந்த சீசனில் 6 ஆட்டங்களில் ஆடுவார் என்று தெரிகிறது.

* 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் 2022-ம் ஆண்டில் நடக்கிறது. அதற்கு அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டியை (2026-ம் ஆண்டு) அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகிறது. 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 32-ல் இருந்து 48 ஆக அதிகரிக்க 2017-ம் ஆண்டில் நடந்த சர்வதேச கால்பந்து சங்க (பிபா) கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரித்த எடுத்த முயற்சி கைவிடப்படுகிறது என்று சர்வதேச கால்பந்து சங்கம் நேற்று அறிவித்துள்ளது.


Next Story