பிற விளையாட்டு

உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் + "||" + 2 bronze for India in world archery

உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
உலக வில்வித்தையில், இந்தியா 2 வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.
டென் போஸ்ச்,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜோதி சுரேகா , முஸ்கான் கிரார், ராஜ் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 229-226 என்ற புள்ளி கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா, துருக்கி வீராங்கனை ஏசிம் போஸ்டனை சந்தித்தார். திரிலிங்கான இந்த சுற்றில் இருவரும் தலா 145 புள்ளிகள் சேர்த்து சமநிலை வகித்தனர். வெற்றியை நிர்ணயிக்க நடத்தப்பட்ட டைபிரேக்கரில் ஜோதி சுரேகா 10-9 என்ற புள்ளி கணக்கில் ஏசிம் போஸ்டனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
2. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்
பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
4. ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
5. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.