பிற விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி + "||" + Formula 1 Car Racing: England player Hamilton wins

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

பாரீஸ், 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 8–வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள லீ காஸ்ட்லெட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 309.69 கிலோமீட்டர் கொண்ட பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் எதிர்பார்த்தது போலவே முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார். 1 மணி 24 நிமிடம் 31.198 வினாடிகளில் முதலாவதாக வந்த ஹாமில்டன் 25 புள்ளிகளை வசப்படுத்தினார். இந்த சீசனில் அவரது 6–வது வெற்றி இதுவாகும். அவரை விட 18.056 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2–வது இடத்தை பிடித்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 5–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதுவரை நடந்துள்ள 8 சுற்று முடிவில் ஹாமில்டன் 187 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் 151 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அடுத்த சுற்று போட்டி வருகிற 30–ந்தேதி ஆஸ்திரியாவில் நடக்கிறது.