பிற விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து: இறுதிப்போட்டியில் சாய் அணி + "||" + All India Volleyball: Sai team in the finals

அகில இந்திய கைப்பந்து: இறுதிப்போட்டியில் சாய் அணி

அகில இந்திய கைப்பந்து: இறுதிப்போட்டியில் சாய் அணி
அகில இந்திய கைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு சாய் அணி தகுதிபெற்றது.
சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் சாய் (தலச்சேரி) அணி 25-20, 23-25, 25-20, 26-24 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். (சென்னை) அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் தென் மத்திய ரெயில்வே 25-8, 25-21, 22-25, 25-11 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


ஆண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா அணி 25-18, 25-18, 25-22 என்ற நேர்செட்டில் வருமானவரி (சென்னை) அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இதே போல் ஐ.சி.எப். அணி 25-18, 25-19, 25-15 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீஸ் அணியையும், வருமானவரி அணி (குஜராத்) 25-17, 18-25, 25-21, 23-25, 15-11 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியையும் சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
2. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சானியா ஜோடி முன்னேறியது.
3. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி அணிகள் மோத உள்ளன.
4. பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம்
பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியது.
5. டோனியால் தவறிப்போன சதம்! ரகசியம் வெளியிட்ட கவுதம் கம்பீர்
உலக கோப்பை இறுதிப்போட்டியில் தன்னால் சதம் அடிக்க முடியாததற்கு டோனியும் ஒரு காரணம் என்று கவுதம் கம்பீர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.