சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் தங்கம் வென்றார்


சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 8 July 2019 10:15 PM GMT (Updated: 8 July 2019 9:21 PM GMT)

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளார்.

புதுடெல்லி, 

போஸ்னன் சர்வதேச தடகள கிராண்ட்பிரி போட்டி போலந்தில் நடந்தது. இதில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் 23.65 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை விஸ்மயா 24.06 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் 21.18 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் எ.பி.ஜாபிர் 50.21 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீரர் ஜிதின் பால் (52.26 வினாடி) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

Next Story