காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்


காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 9 July 2019 10:30 PM GMT (Updated: 9 July 2019 8:45 PM GMT)

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நேற்று தொடங்கியது.

அபியா, 

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீராபாய் சானு ‘ஸ்னாச்’ முறையில் 84 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 107 கிலோவும் தூக்கினார். அவர் மொத்தம் 191 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 45 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜில்லி தாலாபெரா மொத்தம் 154 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனைகள் சோரோக்ஹய்பாம் பிந்தியாராணி தேவி தங்கப்பதக்கமும், மட்சா சந்தோஷி வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார்கள். ஆண்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரிஷிகாந்த சிங் மொத்தம் 235 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.


Next Story