காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை தேவிந்தர் கவுர் தங்கம் வென்றார்


காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை தேவிந்தர் கவுர் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 10 July 2019 9:15 PM GMT (Updated: 10 July 2019 9:05 PM GMT)

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது.

அபியா, 

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைபிரிவில் இந்திய வீராங்கனை தேவிந்தர் கவுர் ‘ஸ்னாச்’ முறையில் 80 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 104 கிலோவும் எடை தூக்கினார். மொத்தம் 184 கிலோ எடை தூக்கிய அவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராஹி ஹால்டெர் ‘ஸ்னாச்’ முறையில் 94 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 120 கிலோவும் என மொத்தம் 214 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஜூனியர் மற்றும் இளையோர் பிரிவில் இந்தியா 5 தங்கப்பதக்கங்களை வென்றது.


Next Story