பிற விளையாட்டு

உலக கோப்பை கபடி: இந்திய அணிகள் அறிவிப்பு + "||" + World Cup Kabaddi: Indian teams announced

உலக கோப்பை கபடி: இந்திய அணிகள் அறிவிப்பு

உலக கோப்பை கபடி: இந்திய அணிகள் அறிவிப்பு
உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

உலக கோப்பை கபடி போட்டி மலேசியாவில் நாளை (சனிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான இந்திய கபடி அணிகளை, புதிய கபடி சம்மேளனம் சென்னையில் நேற்று அறிவித்தது. ஆண்கள் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் (கேப்டன்), அம்பேஸ்வரன், தன்ராஜ் உள்பட 12 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். பெண்கள் அணியில் தமிழகத்தை சேர்ந்த குருசுந்தரி உள்பட 12 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய கபடி அணிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டு செல்கிறது.