தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்திய ஆடவர் இணை தகுதி


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்திய ஆடவர் இணை தகுதி
x
தினத்தந்தி 3 Aug 2019 11:36 AM GMT (Updated: 3 Aug 2019 11:36 AM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்திய ஆடவர் இணை தகுதி பெற்றுள்ளது.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இன்று நடந்த போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, கொரியாவின் கோ சங் ஹியூன் மற்றும் ஷின் பேயெக் செயோல் இணையை எதிர்த்து அரையிறுதியில் விளையாடியது.

இதில், 22-20, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றது.  உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடத்தும் போட்டி ஒன்றில் இந்திய இணையானது முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி 63 நிமிடங்கள் நீடித்தது.  அவர்கள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவின் லி ஜன் ஹுய் மற்றும் லியூ யூ சென் இணையை எதிர்த்து விளையாடுகின்றனர்.

Next Story