பிற விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா இன்று களம் இறங்குகிறார்கள் + "||" + Korean Open Badminton: Sindh and Saina take to the field today

கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா இன்று களம் இறங்குகிறார்கள்

கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா இன்று களம் இறங்குகிறார்கள்
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், சிந்து, சாய்னா ஆகியோர் இன்று களம் இறங்குகிறார்கள்.
இன்சியான்,

மொத்தம் ரூ.2¾ கோடி பரிசுத்தொகைக்கான கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்சியான் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் மட்டும் நடந்தன. 2-வது நாளான இன்று முன்னணி வீரர், வீராங்கனைகள் அடியெடுத்து வைக்கிறார்கள். உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் பீவென் ஜாங்குடன் (அமெரிக்கா) மோதுகிறார். மற்றொரு இந்திய மங்கை சாய்னா நேவால், உள்நாட்டு வீராங்கனை கிம் கா அனை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் காஷ்யப், லூ சியா ஹங்கையும் (சீனதைபே), சாய் பிரனீத் (இந்தியா), ஆன்டர்ஸ் அன்டோன்செனையும் (டென்மார்க்) தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் உதவி
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.