பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி + "||" + Pro Kabaddi: Bangalore and Mumbai teams qualify for next round

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.
பஞ்ச்குலா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு பஞ்ச்குலாவில் நடந்த 118-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 59-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.


பெங்களூரு நட்சத்திர வீரர் பவான் செராவத் 38 முறை ரைடுக்கு சென்று அதில் 39 புள்ளிகளை குவித்து வியப்பூட்டினார். ஒரு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் சேர்த்த வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இதற்கு முன்பு பாட்னா வீரர் பர்தீப் நார்வல் ஒரு ஆட்டத்தில் ரைடு மூலம் 34 புள்ளி எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை பவான் செராவத் தகர்த்தார்.

11-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 30-26 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை தோற்கடித்து 11-வது வெற்றியுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை 5 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு உ.பி.யோத்தா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-புனேரி பால்டன் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.
2. புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி
புரோ கபடி: கடைசி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
3. புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு அரியானா முன்னேற்றம்
புரோ கபடி போட்டியின் அடுத்த சுற்றுக்கு அரியானா அணி முன்னேறியது.
4. புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
புரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் 35-33 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணி தோல்வியடைந்தது.
5. புரோ கபடி: ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...