சென்னை பல்கலைக்கழக தடகளம்: ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் ஐஸ்வர்யா சாதனை


சென்னை பல்கலைக்கழக தடகளம்: ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் ஐஸ்வர்யா சாதனை
x
தினத்தந்தி 14 Oct 2019 11:14 PM GMT (Updated: 14 Oct 2019 11:14 PM GMT)

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியின் டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் ஐஸ்வர்யா சாதனை படைத்தார்.

சென்னை,

ஏ.லட்சுமணசாமி முதலியார் கோப்பைக்கான 52-வது சென்னை பல்கலைக்கழக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் நடந்த பெண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை ஆர்.ஐஸ்வர்யா 12.65 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை கே.என். பிரியா 12.48 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் எம்.சி.சி. வீரர் எம்.ரகுராம் 1 நிமிடம் 51.16 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இதேபோல் சங்கிலி குண்டு எறிதலில் லயோலா வீரர் நிர்மல் ராஜ் 60.27 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பெற்றார்.


Next Story