குல்தீப் யாதவ் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகல்


குல்தீப் யாதவ் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:38 PM GMT (Updated: 18 Oct 2019 11:38 PM GMT)

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.


* இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் நடக்கும் ராஞ்சி, முன்னாள் கேப்டன் டோனியின் சொந்த ஊராகும். இன்றைய முதல் நாள் ஆட்டத்தை அவர் நேரில் சென்று பார்க்க இருப்பதாக அவரது மேலாளர் திவாகர் தெரிவித்துள்ளார்.

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடது தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால் கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் அழைக்கப்பட்டுள்ளார்.

* ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும் இந்திய ஆண்கள் அணிக்கு கேப்டனாக மன்பிரீத்சிங், துணை கேப்டனாக எஸ்.வி.சுனில், இந்திய பெண்கள் அணிக்கு கேப்டனாக ராணி ராம்பால், துணை கேப்டனாக சவிதா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக 2 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியவர் குலாம் போடி. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 40 வயதான குலாம்போடி, மேட்ச்பிக்சிங் என்ற சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட அவருக்கு இது தொடர்பான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* மும்பையில் வருகிற 23-ந்தேதி நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தலில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

* 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 2 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் 169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஸ்காட்லாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) அயர்லாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது.


Next Story