பிற விளையாட்டு

ரிஷாப் பண்டை டோனியுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்காதீர்கள் - ஆடம் கில்கிறிஸ்ட் + "||" + Don't try to compare Rishabh's band with Dhoni - Adam Gilchrist

ரிஷாப் பண்டை டோனியுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்காதீர்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்

ரிஷாப் பண்டை டோனியுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்காதீர்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்
ரிஷாப் பண்டை டோனியுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்காதீர்கள் என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய அந்த அணியின் கேப்டனான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார். வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் நடந்த இது தொடர்பான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. பஞ்சாப் அணி நிர்வாகம் அஸ்வினை வழங்கி விட்டு டெல்லி அணியில் இருந்து 2 வீரர்களை பெறுகிறது.


* இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்றுவதாக சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. ஏற்கனவே பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்திய அணியின் விளையாடாத கேப்டன் மகேஷ் பூபதி விலகியதால், அவருக்கு பதிலாக ரோகித் ராஜ்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணா, ‘இந்த போட்டி எங்கு நடக்கப்போகிறது என்பதை சர்வதேச டென்னிஸ் சங்கம் முடிவு செய்வதற்கு முன்பாகவே இந்திய டென்னிஸ் சம்மேளனம் கேப்டனை மாற்றியது ஆச்சரியம் அளிக்கிறது. அது மட்டுமின்றி கேப்டன் மாற்றம் குறித்து எந்த வீரர்களிடம் கேட்காமல், அது பற்றி தகவல் கூட சொல்லாதது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள இந்திய டென்னிஸ் சம்மேளன பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீ ‘வீரர்களின் பணி விளையாடுவது. இது போன்ற கேள்வியை கேட்பதற்கு ரோகன் போபண்ணா யார்? இது நிர்வாக விவகாரம். இதில் வீரர்கள் தலையிட கூடாது’ என்றார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய ரசிகர்களும் சரி, ஊடகத்தினரும் சரி, இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை டோனியுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்காதீர்கள். எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். இயான் ஹீலேவுக்கு பிறகு என்னை ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்த போது, நான் அவரை போன்று இருக்க முயற்சிக்கவில்லை. அவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால் கில்கிறிஸ்டாகவே இருக்க விரும்பினேன். அதைத்தான் செய்தேன். இதைத் தான் ரிஷாப் பண்டுக்கும் நான் கூறுவேன். உன்னால் முடிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொள். முடிந்த அளவுக்கு கடினமாக உழை. ஆனால் டோனியாக முயற்சிக்காதே. சிறந்த ரிஷாப் பண்டுவாக இருக்க முயற்சி செய்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. களத்தில் ஜொலிக்காவிட்டால் ரிஷாப் பண்டை கிண்டல் செய்யாதீர்கள் - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்
களத்தில் ஜொலிக்காத போது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை கிண்டல் செய்யாதீர்கள் என்று இந்திய கேப்டன் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ரிஷாப் பண்ட் பக்குவப்பட்ட வீரராக மாற இன்னும் அவருக்கு கால அவகாசம் தேவை - சவுரவ் கங்குலி
ரிஷாப் பண்ட் பக்குவப்பட்ட வீரராக மாற இன்னும் அவருக்கு கால அவகாசம் தேவை என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
3. ‘ரிஷாப் பண்டுக்கு கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ - யுவராஜ்சிங் சொல்கிறார்
‘இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு கேப்டன் விராட் கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
4. ‘ரிஷாப் பண்டுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது’ - கேப்டன் விராட்கோலி பேட்டி
‘இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.