சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி


சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 15 Nov 2019 11:33 PM GMT (Updated: 15 Nov 2019 11:33 PM GMT)

சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.


* ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை நேற்று சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், காயம் காரணமாக சென் லாங் விலகினார். இதனால் ஸ்ரீகாந்த் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

* சென்னை எழும்பூரில் நடந்து வரும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏர் இந்தியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் செயின்ட் ஜார்ஜ் அணியை வீழ்த்தியது. ஏர் இந்தியா அணியில் நாக உபேந்திரா 2 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் மெட்ராஸ் புளூஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்டை வென்றது.

* சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் திரிபுராவை 79 ரன்களில் கட்டுப்படுத்திய தமிழக அணி அந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

* கயானாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்களே எடுத்தது. இந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிய இந்திய அணி 5 போட்டி கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story