ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா? விஸ்வநாதன் ஆனந்த் பதில்


ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா? விஸ்வநாதன் ஆனந்த் பதில்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:16 PM GMT (Updated: 12 Dec 2019 11:16 PM GMT)

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான தமிழகத்தை சேர்ந்த 50 வயதான விஸ்வநாதன் ஆனந்த் அளித்த பேட்டி.

சென்னை,

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான தமிழகத்தை சேர்ந்த 50 வயதான விஸ்வநாதன் ஆனந்த் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஹரிகிருஷ்ணன், விதித், சேகர் கங்குலி, சசிகிரண் ஆகியோரில் இருந்து யாராவது விரைவில் டாப்-10 இடத்திற்குள் வந்து விடுவார்கள். இதே போல் பிரக்ஞானந்தா, நிஹல் சரின், டி.குகேஷ், ராவ்னக் சத்வானி என்று நம்மிடம் திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும்’ என்றார்.

செஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புள்ளதா? என்று கேட்ட போது, ‘எனக்கு தெரியாது. அது பற்றி நான் அதிகமாக சிந்திக்கவும் இல்லை. ஒரு வேளை ஆலோசகராக செயல்பட வாய்ப்புள்ளது. வரும் ஆண்டில் எனக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. அதில் தான் இப்போது முழு கவனமும் உள்ளது’ என்றார்.

Next Story