மாநில கபடி போட்டி: கண்ணகி நகர் அணி வெற்றி


மாநில கபடி போட்டி: கண்ணகி நகர் அணி வெற்றி
x
தினத்தந்தி 11 March 2020 11:50 PM GMT (Updated: 11 March 2020 11:50 PM GMT)

மாநில கபடி போட்டியில், கண்ணகி நகர் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

வீரன் அழகு முத்துக்கோன் நினைவு மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எத்திராஜ், ஒருங்கிணைப்பாளர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.

பெண்கள் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாரதி கல்லூரி-கண்ணகி நகர் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கண்ணகி நகர் அணி 30-24 என்ற புள்ளி கணக்கில் பாரதி கல்லூரியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை குயின்ஸ் அணி 58-22 என்ற புள்ளி கணக்கில் செல்லம்மாள் கல்லூரியை தோற்கடித்தது. இன்னொரு ஆட்டத்தில் வி.எம்.பிரதர்ஸ் கிளப் அணி 45-22 என்ற புள்ளி கணக்கில் ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரியை வென்றது. ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் அனகாபுத்தூர் அணி 35-11 என்ற புள்ளி கணக்கில் பிளை கைஸ் அணியை தோற்கடித்தது.


Next Story