பெட் கோப்பை ஹார்ட் விருது: சானியாவின் பெயர் பரிந்துரை


பெட் கோப்பை ஹார்ட் விருது: சானியாவின் பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 30 April 2020 11:00 PM GMT (Updated: 30 April 2020 7:20 PM GMT)

பெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு இந்தியாவின் சானியா மிர்சாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


* இந்த ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதே போல் சிறந்த 20 ஓவர் போட்டி வீரருக்கான விருதை ராஸ் டெய்லரும், சிறந்த 20 ஓவர் போட்டி வீராங்கனை விருதை சோபி டேவினும், நியூசிலாந்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனைக்கான விருதை சுசி பேட்சும் தட்டிச் சென்றுள்ளனர்.

* பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் லீக்-1 கால்பந்து போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்துடன் நின்று போனது. இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு புள்ளி பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதலிடம் வகித்த நெய்மார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை கொண்டுள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணி சாம்பியன் கோப்பையை வென்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 2-வது இடத்தை மார்செலி (56 புள்ளி) அணி பெற்றது.

* 2 ஆண்டுகளுக்குபின் களம் திரும்பிய இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடினார். இந்தநிலையில் அவரது பெயர், இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோகோவுடன் இணைந்து பெட் கோப்பை இதய (ஹார்ட்) விருதுக்கு ஆசியா-ஓசியானியா மண்டலத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் சானியா தான்.

* கடந்த மார்ச் 13-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் விளையாடியது, உண்மையான சர்வதேச போட்டி போன்றே இல்லை. ஏதோ பயிற்சி ஆட்டம் போன்று உணர்ந்ததாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். அது புதுமையான அனுபவமாக இருந்தாலும் இதே போன்று தொடர்ந்து விளையாடினால் அதற்கு ஏற்ப வீரர்களால் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Next Story