பிற விளையாட்டு

பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன் + "||" + Prohibition of rubbing saliva on the ball is an interim measure - UNC Cricket Committee Chairman

பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன்

பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன்
பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இடைக்கால நடவடிக்கை தான் என ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன் கும்பிளே தெரிவித்துள்ளார்.

* ‘பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இடைக்கால நடவடிக்கை தான். கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததும் மீண்டும் பழைய நிலை கொண்டு வரப்படும்’ என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன் கும்பிளே கூறியுள்ளார்.

* ‘கேலோ இந்தியா’ விளையாட்டு திட்டத்திற்கு தேர்வான 2,749 பேருக்கு பயணப்படி உள்பட அன்றாட செலவுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8¼ கோடி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) தெரிவித்துள்ளது.

* இந்திய தடகள வீரர், வீராங்கனைகளின் வெளிப்புற பயிற்சி இன்று தொடங்குகிறது. பாட்டியாலா தேசிய விளையாட்டு மையம், பெங்களூரு மற்றும் ஊட்டியில் உள்ள பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி நடக்க உள்ளது. முதற்கட்டமாக உடல்தகுதியை மேம்படுத்தும் பயிற்சிகளில் வீரர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை (2021-ம் ஆண்டு) மற்றும் 50 ஓவர் உலக கோப்பை (2023) போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெற்று இருக்கிறது. ஆனால் இவ்விரு போட்டிகளுக்கும் வரிவிலக்கு பெறும் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், ஐ.சி.சி.க்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது. ஊரடங்கு முடியாத வரை வரிவிலக்கு பெறுவது குறித்து அரசு அதிகாரிகளிடம் விவாதிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. பிரச்சினையை சுமூகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2. கடலூர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை
கடலூர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு.
3. நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அகற்றம்: நுங்கு, இளநீர் விற்கவும் தடை
நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் நுங்கு, இளநீர் விற்கவும் தடை விதித்தனர்.
4. அரசு ஊழியர்களின் ஊதியக் குறைப்புக்கு தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கைக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. 4 நாட்கள் முழு ஊரடங்கு: கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை
சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.