பிற விளையாட்டு

அமெரிக்க மண்டலத்தில் நடக்க இருந்த பார்முலா1 கார்பந்தய போட்டிகள் ரத்து + "||" + Formula 1 car racing in the US has been canceled

அமெரிக்க மண்டலத்தில் நடக்க இருந்த பார்முலா1 கார்பந்தய போட்டிகள் ரத்து

அமெரிக்க மண்டலத்தில் நடக்க இருந்த பார்முலா1 கார்பந்தய போட்டிகள் ரத்து
கொரோனா பாதிப்பு எதிரொலியாக, அமெரிக்க மண்டலத்தில் நடக்க இருந்த பார்முலா1 கார்பந்தய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு விஸ்டன் கோப்பை வழங்கப்படுகிறது. அடுத்த தொடரில் இருந்து இந்த பெயர் மாற்றப்பட்டு ரிச்சர்ட்ஸ்-போத்தம் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்படும். இது மிகப்பெரிய கவுரவம் என்று ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்சும் (வெஸ்ட் இண்டீஸ்), இயான் போத்தமும் (இங்கிலாந்து) மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

* மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இணைய தளம் மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘சில விளையாட்டு நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்து இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கான வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் சமீபத்தில் தொடங்கின. மெதுவாக விளையாட்டு நடவடிக்கைகளை தொடங்குங்கள் என்று மாநில விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சங்கங்களிடம் தெரிவித்து இருக்கிறேன். மக்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். நமது நாட்டில் விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று நம்புகிறேன்’என்று தெரிவித்தார்.

*பார்முலா1 கார்பந்தயத்தில் அமெரிக்க மண்டலத்தில் நடக்க இருந்த கனடா, டெக்சாஸ், மெக்சிகோ, பிரேசில் ஆகிய கிராண்ட்பிரி போட்டிகள் கொரோனா அபாயம் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக ஐரோப்பிய நாடுகளில் 3 சுற்று கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.