தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தீபக் பூனியா உள்பட 3 மல்யுத்த வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு


தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தீபக் பூனியா உள்பட 3 மல்யுத்த வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2020 12:38 AM GMT (Updated: 4 Sep 2020 12:38 AM GMT)

தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தீபக் பூனியா உள்பட 3 மல்யுத்த வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய மல்யுத்த வீரர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் நடந்து வருகிறது. இந்த முகாமில் பங்கேற்று இருக்கும் வீரர்கள் அனைவரும் விதிமுறைப்படி பயிற்சியை தொடங்கும் முன்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அப்போது அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கடந்த ஆண்டு உலக மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நட்சத்திர வீரர் தீபக் பூனியா (86 கிலோ பிரிவு) மற்றும் வீரர்கள் நவின் (65 கிலோ), கிருஷ்ணன் (125 கிலோ) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

3 வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story