பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் லங்கா பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது.
* ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகி விட்டதால் 3-வது பேட்டிங் வரிசையில் அம்பத்தி ராயுடுவை களம் இறக்கலாம். அந்த வரிசைக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார்’ என்று நியூசிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

* ‘சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருகிற 17-ந்தேதி தனி விமானத்தில் அமீரகம் வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்து அபுதாபிக்கு வருவோர், அரசாங்க உத்தரவுப்படி 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த நடைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக 6 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), மோர்கன், டாம் பான்டன் (இருவரும் இங்கிலாந்து) ஆகியோரின் தனிமைப்படுத்துதல் அணியின் முதல் ஆட்டம் நடக்கும் 23-ந்தேதிக்குள் (அபுதாபியில் கொல்கத்தா-மும்பை அணிகள் மோதல்) முடிந்து விடும். அதனால் அவர்கள் முதல் ஆட்டத்தில் இருந்தே அணித்தேர்வுக்கு தயாராக இருப்பார்கள்’ என்று கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் தெரிவித்தார்.

*தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் ரெய்னா விலகியதால் அவருக்கு பதிலாக தற்போது 20 ஓவர் போட்டியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மலான் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் மறுத்துள்ளார். ‘இது முற்றிலும் வதந்தி. சென்னை அணியில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டது. அப்படி இருக்கும் போது எப்படி வெளிநாட்டு வீரரை சேர்க்க முடியும்’ என்றார்.

* இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் லங்கா பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான ஏலம் அக்டோபர் 1-ந்தேதி நடக்கிறது. ஏலப்பட்டியலில் கிறிஸ் கெய்ல், அப்ரிடி, ஷகிப் அல்-ஹசன், காலின் முன்ரோ, டேரன் பிராவோ, டேரன் சேமி, முனாப்பட்டேல் உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இனி எல்லை தாண்டினால்... பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
3. ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.