பிற விளையாட்டு

உலக கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீரர் அமித் பன்ஹால் தங்கம் வென்றார் + "||" + World Cup boxing Indian player Amit Panhal won the gold

உலக கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீரர் அமித் பன்ஹால் தங்கம் வென்றார்

உலக கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீரர் அமித் பன்ஹால் தங்கம் வென்றார்
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
புதுடெல்லி, 

ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹாலை எதிர்த்து களம் இறங்க இருந்த ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யன் கடைசி நேரத்தில் விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. 91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. இந்திய வீரர்கள் முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாக்‌ஷி, மனிஷா ஆகியோர் இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர். இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கிலோ) அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை குத்துச்சண்டை: 9 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்
10 நாடுள் பங்கேற்ற உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்தது.
2. உலக கோப்பை குத்துச்சண்டை - துளிகள்
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.