‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத அணி நிர்வாகம் இந்த டெஸ்டிலும் பாபர் அசாம் ஆடமாட்டார் - துளிகள்


‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத அணி நிர்வாகம் இந்த டெஸ்டிலும் பாபர் அசாம் ஆடமாட்டார் - துளிகள்
x
தினத்தந்தி 2 Jan 2021 8:47 PM GMT (Updated: 2 Jan 2021 8:47 PM GMT)

பாகிஸ்தான்- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குகிறது.

* கைபெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் முதலாவது டெஸ்டில் ஆடாத பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு விரலில் இன்னும் கொஞ்சம் வலி இருப்பதால் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத அணி நிர்வாகம் இந்த டெஸ்டிலும் பாபர் அசாம் ஆடமாட்டார் என்று அறிவித்துள்ளது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அணியை வழிநடத்துவார்.

* தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில்இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இலங்கை அணியில் 4-5 வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் இந்த டெஸ்டிலும் அந்த அணி தாக்குப்பிடிப்பது கடினம். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

*தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக 37 வயதான ஸ்டெயின் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். ஆனால் இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டிக்கான கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story