பிற விளையாட்டு

10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி நாளை தொடக்கம் + "||" + Chennai district ‘A’ division volleyball tournament with 10 teams will start tomorrow

10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி நாளை தொடக்கம்

10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி நாளை தொடக்கம்
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம், ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் ஆதரவுடன் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்கிழமை) முதல் 10-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம், ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் ஆதரவுடன் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்கிழமை) முதல் 10-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சில ஆட்டங்களோடு கைவிடப்பட்ட இந்த போட்டி தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.

இதில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.பி, சுங்க இலாகா, இந்தியன் வங்கி, வருமானவரி, தமிழ்நாடு போலீஸ், ஐ.சி.எப், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி, செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி, சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ‘பி’ டிவிசனில் வெற்றி பெற்ற சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப், 2-வது இடம் பிடித்த இந்தியன் வங்கி அணிகள் தரம் உயர்த்தப்பட்டு இந்த ஆண்டு ‘ஏ’ டிவிசனில் கால்பதிக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி கோப்பையை வெல்லும். கடைசி 4 இடத்தை பிடிக்கும் அணிகள் தரம் இறக்கப்படும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3½ லட்சம் ஆகும். போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், போட்டி இயக்குனர் ஏ. பழனியப்பன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி
கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 81 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
2. கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.
3. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2-வது நாளில் இந்தியா 5 பதக்கங்களை அள்ளியது.
4. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு அதிகபட்சமாக கரூரில் 90 பேர் போட்டி
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்து உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட 90 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
5. மனைவி தேர்தலில் போட்டி: நெல்லை கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் அதிரடி இடமாற்றம்
மனைவி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.