பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹரா, ஜியா சாம்பியன் + "||" + All England Badminton: Okuhara, Jia Champion

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹரா, ஜியா சாம்பியன்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹரா, ஜியா சாம்பியன்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் ஒகுஹரா, ஜியா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
பர்மிங்காம், 

புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் போர்ன்பவீ சோச்சுவோங்கை (தாய்லாந்து) வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். அவருக்கு ரூ.43 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

இதன் ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லீ ஸி ஜியா (மலேசியா) 30-29, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் போராடி நடப்பு சாம்பியன் விக்டர் ஆக்சல்செனை (டென்மார்க்) சாய்த்து முதல்முறையாக மகுடம் சூடினார். திரிலிங்கான இந்த ஆட்டம் 1 மணி 14 நிமிடங்கள் நீடித்தது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்தியர்களில் சிறந்த செயல்பட்டாக பி.வி.சிந்து அரைஇறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சிந்து தோல்வி அடைந்தார்.
2. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி காயத்தால் சாய்னா பாதியில் விலகல். ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
3. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து வெற்றி ஸ்ரீகாந்த், காஷ்யப் வெளியேற்றம்
மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.