உலக இளையோர் குத்துச்சண்டை: கால்இறுதியில் அருந்ததி


உலக இளையோர் குத்துச்சண்டை: கால்இறுதியில் அருந்ததி
x
தினத்தந்தி 17 April 2021 2:03 AM GMT (Updated: 17 April 2021 2:03 AM GMT)

உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

இதில் பெண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் டியானெரியா காசஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ராஜஸ்தானை சேர்ந்த அருந்ததி கேலோ இந்தியா போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். 48 கிலோ பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஜிதிகா 5-0 என்ற கணக்கில் ஐரோப்பிய சாம்பியனான டியானா எர்மாகோவாவை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சுமித், வெனிசுலாவின் ரபெல் பெர்டோமோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 60 கிலோ பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆகாஷ் கோர்ஹா 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் என்ரிகோ கிலிச்சை வெளியேற்றினார்.

Next Story