உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2021 12:35 AM GMT (Updated: 2021-06-26T06:05:37+05:30)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

ஒசிஜெக்,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோஷியாவில் உள்ள ஒசிஜெக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் மானு பாகெர், யாஷஸ்வினி சிங் தேஸ்வால், ராஹி சர்னோபாத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 16-12 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், தீபக் குமார், திவ்யனாஷ் சிங் பன்வார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 14-16 என்ற புள்ளி கணக்கில் செர்பியாவிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் அஞ்சும் மோட்ஜில், அபூர்வி சண்டிலா, இளவேனில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1867 புள்ளிகள் சேர்த்து 11-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

Next Story