பிற விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார் + "||" + World Cup archery Indian player Abhishek Varma Gold won

உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்

உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்
நேற்று நடந்த ஆண்களுக்கான ‘காம்பவுண்ட்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார்.
பாரீஸ், 

உலக கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘காம்பவுண்ட்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியின் முடிவில் இருவரும் 148-148 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தனர். இதனை அடுத்து நடந்த டைபிரேக்கரில் அபிஷேக் வர்மா 10-9 என்ற புள்ளி கணக்கில் கிரிஸ் ஸ்கேப்பை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக கோப்பை போட்டியில் அபிஷேக் வர்மா தங்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு போலந்தில் நடந்த உலக போட்டியிலும் வென்று இருந்தார்.