பிற விளையாட்டு

கென்யாவை சேர்ந்த டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை மர்ம மரணம் + "||" + Agnes Tirop, who represented Kenya in 5,000m in Tokyo Olympics, found dead

கென்யாவை சேர்ந்த டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை மர்ம மரணம்

கென்யாவை சேர்ந்த டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை மர்ம மரணம்
அக்னஸ் ட்ரோப் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டு நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடம் பிடித்தார்.
கென்யா 

கென்யாவை சேர்ந்த 25 வயது தடகள வீராங்கனை அக்னஸ் ட்ரோப். இவர் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10,000 மீ  ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றவர். 

அக்னஸ் ட்ரோப் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்  5,000 மீ  ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டு நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடம் பிடித்தார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் இன்று அதிகாலை வயிற்றில்  காயங்களுடன் இறந்து கிடந்தார்.அவரது மரணத்திற்கான  காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது  குறித்து கென்யாவின் சர்வதேச தடகள  கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கென்யா சர்வதேச அரங்கில் வேகமாக வளர்ந்து வரும் தடகள ஜாம்பவான்களில் ஒரு மாணிக்கத்தை இழந்துள்ளது. தடகளத்தில் பல கண்கவர் நிகழ்ச்சிகளை காண்பித்த அக்னஸ் அவர்களுக்கு நன்றி 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

1. கென்யா ஒலிம்பிக் வீராங்கனை கொலை :கணவர் கைது
திருமண வாழ்வில் நடந்த பிரச்சினை காரணமாக இம்மானுவேல் ரோட்டிச், அக்னஸ் டிரோப்பை கொலை செய்து இருக்கலாம் என கென்ய ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2. கென்யா வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை
கென்யா வெளியுறவுத்துறை மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.