பிற விளையாட்டு

ஆசிய வில்வித்தை போட்டி: மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா + "||" + Asian Archery Championships India won a total 7 medals

ஆசிய வில்வித்தை போட்டி: மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா

ஆசிய வில்வித்தை போட்டி: மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா
ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்கபட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது.
டாக்கா,

22-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘ரீகர்வ்’ அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் கபில், பிரவின் ஜாதவ், பார்த் சலுங்கே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-6 என்ற கணக்கில் தென்கொரியா அணியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றது. 

பெண்களுக்கான ‘ரீகர்வ்’ அணிகள் பிரிவில் அங்கிதா பாகத், மது வேத்வான், ரிதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-6 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் சரண் அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. ‘ரீகர்வ்’ கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் கபில், அங்கித் பாகத் ஜோடி 6-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்டுசட்டோரோவா-அமிர்கான் சாடிகோவ் இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. 

இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்கபட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. தென்கொரியா 9 தங்கம் உள்பட 15 பதக்கம் வென்று முதலிடத்தை தனதாக்கியது.