பாரா ஆசிய விளையாட்டு போட்டி தள்ளிவைப்பு


பாரா ஆசிய விளையாட்டு போட்டி தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 17 May 2022 10:50 PM GMT (Updated: 2022-05-18T04:20:01+05:30)

கொரோனா பரவல் காரணமாக ஹாங்சோவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டது.


4-வது பாரா ஆசிய விளையாட்டு (மாற்று திறனாளிகளுக்கான) போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் வருகிற அக்டோபர் 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்க இருந்தது. இந்த போட்டியில் சுமார் 35 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருந்தனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வந்தன. தற்போது சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஆசிய பாரா ஒலிம்பிக் கமிட்டி, உள்ளூர் போட்டி அமைப்பு குழுவினருடன் கலந்து ஆலோசித்து பாரா ஆசிய விளையாட்டு போட்டியை காலவரையின்றி தள்ளிவைப்பதாக நேற்று அறிவித்தது. இந்த போட்டியை அடுத்த ஆண்டில் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆசிய பாரா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சீன ஒலிம்பிக் கமிட்டியினர் அடங்கிய குழு அமைத்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டி சமீபத்தில் தள்ளிவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்படும் நகரிலேயே பாரா ஆசிய விளையாட்டு போட்டியும் நடத்தப்படுவது வழக்கமாகும்.Next Story