ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து, பிரன்னாய் காலிறுதிக்கு தகுதி


ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து, பிரன்னாய் காலிறுதிக்கு தகுதி
x

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரன்னாய் காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

துபாய்,

துபாயில் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் கடந்த 25-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் சீனாவின் ஹான் யூ ஆகியோர் விளையாடினர்.

இதில், 21-12, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால், அவர் காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். அதற்கு முன் நடந்த போட்டி ஒன்றில் தைவான் வீராங்கனை சூ வென்-சி உடன் விளையாடினார். அந்த போட்டியில், 21-15, 22-20 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

இதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரன்னாய் மற்றும் இந்தோனேசியாவின் சிக்கோ ஆரா வி வார்தோயோ ஆகியோர் விளையாடினர். இதில், 21-16, 5-21, 21-18 என்ற செட் கணக்கில் பிரன்னாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதற்கு முன் நடந்த போட்டி ஒன்றில் மியான்மர் நாட்டின், போன் பியாயே நைங் உடன் விளையாடினார். அந்த போட்டியில் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


Next Story