உலகக் கோப்பை கூடைப்பந்து: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது ஜெர்மனி


உலகக் கோப்பை கூடைப்பந்து: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது ஜெர்மனி
x
தினத்தந்தி 8 Sep 2023 8:57 PM GMT (Updated: 9 Sep 2023 12:44 AM GMT)

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-செர்பியா மோதுகின்றன.

மணிலா,

19-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி அணி 113-111 என்ற புள்ளி கணக்கில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை போட்டியில் ஜெர்மனி அணியிடம் அமெரிக்கா தோல்வியை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். மற்றொரு அரைஇறுதியில் செர்பியா 95-86 என்ற புள்ளி கணக்கில் கனடாவை சாய்த்தது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-செர்பியா மோதுகின்றன. முன்னதாக நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்கா-கனடா அணிகள் சந்திக்கின்றன.


Next Story