அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  4-வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்
x

Image Courtesy: AFP

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனனயாளரும் , உலகின் 3-ம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 3-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர் கொண்டார்.

இதில் நடால் 6-0 , 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கேஸ்குயிட்டுக்கு எதிரான 18 ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.

3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3 , 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜென்சனை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டோவிசை எதிர்கொண்டார். இதில் இகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story