டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்ல தயாராகிறார் செரீனா + "||" + French Open: Serena ready to win the championship

பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்ல தயாராகிறார் செரீனா

பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்ல தயாராகிறார் செரீனா
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வெல்ல செரீனா வில்லியம்ஸ் தயாராகி வருகிறார். #SerenaWilliams
பிரான்ஸ்,

உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை நீண்ட காலமாக தக்க வைத்திருந்த செரீனா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருந்தார். இதற்கிடையே இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கர்ப்பம் தரித்திருந்த போதே சாம்பியன் பட்டம் வென்றார்.


அதுவே அவர் அந்த சீசனில் பங்கேற்ற கடைசி போட்டியாகும். மேலும் செப்டம்பர் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பல மாதங்கள் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியலில் அவர் 454-வது இடத்தில் உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மியாமி ஓபன் போட்டியில் விளையாடிய செரீனா முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார். தற்போது மீண்டும் களம் காணும் அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட உள்ளார். அவர் விளையாடாத நிலையில் மரியா ஷரபோவா, வோஸ்னியாக்கி, ஜெலனா ஓஸபென்கோ, லோன் ஸ்டெபன்ஸ், ஆகியோர் களத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். ஏற்கெனவே 2002, 2013, 2015-ஆம் ஆண்டுகளில் செரீனா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் செரீனா வில்லியம்ஸ் நீண்ட நாள்களுக்கு பிறகு  களம் காண உள்ளார்.