டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச் + "||" + Novak Djokovic vs Rafael Nadal Live Score, Wimbledon Semi-Final: Nadal, Djokovic Locked In Epic Battle As Match Crosses 5-Hour Mark

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார்.
லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் இஷ்னெரை எதிர்கொண்டார். 

இந்நிலையில் ஆட்டம் துவங்கியதிலிருந்தே இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. சுமார் 6 மணி நேரம் 36 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.  

இந்த நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில், இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலும் ஜோகோவிச்சும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இறுதியில்,  6-4, 3-6, 7-6(11/9), 3-6, 10-8. என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை போராடி, ஜோகோவிச் வீழ்த்தி  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.