டென்னிஸ்

சான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல் + "||" + Garbine Muguruza out of San Jose WTA with arm injury

சான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல்

சான் ஜோஸ் டென்னிஸ் போட்டி: காயம் காரணமாக முகுருஜா விலகல்
சான்ஜோஸ் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக முன்ணனி வீராங்கனையான முகுருஜா விலகினார். #GarbineMuguruza
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சான் ஜோஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் முன்ணனி வீராங்கனை முகுருஜா வெளியேறினார்.

முன்னதாக 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சியளித்தார். மேலும் விக்டோரியா அசரென்கா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.


இந்நிலையில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான கார்பைன் முகுருஜா, விம்பிள்டன் இரண்டாம் சுற்றில் வெளியேறிய நிலையில் சான் ஜோஸ் போட்டியின் மூலம் மீண்டும் களமிறங்கினார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து முகுருஜா கூறுகையில், கடந்த சில நாட்களாக என் வலது கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. போட்டியில் விளையாட தயாராக இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது, அடுத்த நடக்க உள்ள போட்டிகளுக்காக விரைவில் குணமடைவேன், "என்று கூறினார்.

முகுருஜாவுக்கு பதிலாக ரஷியாவின் அன்னா பிளின்கோவா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயம்
தர்மபுரி அருகே பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். இதனால் தரமான பஸ்களை இயக்க கோரி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அன்னவாசல் அருகே பெருமாநாட்டில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமடைந்தார். இதைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்
சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.
4. முடிகொண்டான் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயம்
முடிகொண்டான் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.
5. அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர்.