டென்னிஸ்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச் + "||" + Shanghai Open Tennis: Federer in the semi-final, Djokovich

ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச்
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியின், அரைஇறுதிக்கு பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 12-ம் நிலை வீரரான நிஷிகோரியை (ஜப்பான்) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-1), 6-3 என்ற நேர்செட்டில் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.