டென்னிஸ்

காதலியுடன் திருமண நிச்சயம் செய்தார், ரபெல் நடால் + "||" + With girlfriend The wedding was engaged, Rafael Nadal

காதலியுடன் திருமண நிச்சயம் செய்தார், ரபெல் நடால்

காதலியுடன் திருமண நிச்சயம் செய்தார், ரபெல் நடால்
ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் 32 வயதான ரபெல் நடால், மேரி பெரேலோ என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகிறார்.
மாட்ரிட்,

முக்கியமான போட்டிகளின் போது மைதானத்திற்கு சென்று நடாலை உற்சாகப்படுத்தும் பெரேலோ, நடாலின் டென்னிஸ் அகாடமியையும் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் 8 மாதத்திற்கு முன்பே மேரி பெரேலோவுக்கு மோதிரம் அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு விட்டதாகவும், அந்த தகவலை இதுவரை ரகசியமாக வைத்திருந்ததாகவும் நடால் தற்போது கூறியுள்ளார். ஆண்டின் இறுதியில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.