டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு + "||" + World tennis rankings Jokovich, Naomi Osaka is the Top place to extend

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
நியூயார்க்,

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 31 வயதான செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (11,160 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் இந்த வாரத்தையும் சேர்த்து மொத்தம் 250 வாரங்கள் முதலிடத்தை அலங்கரிக்கிறார். இதன் மூலம் முதலிடத்தை 250 வாரங்கள் ஆக்கிரமித்த 5-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.


ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,765 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (5,590 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (5,565 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் டொமினிக் திம் (5,085 புள்ளிகள்) 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 21 வயது ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,151 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். செக் குடியரசின் கிவிடோவா (5,835 புள்ளிகள்), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,682 புள்ளிகள்), ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (5,220 புள்ளிகள்), செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (5,111 புள்ளிகள்), உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (4,921 புள்ளிகள்), நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் (4,765 புள்ளிகள்), அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (4,386 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டி (4,275 புள்ளிகள்), பெலாரஸ்சின் சபலென்கா (3,520 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார், டொமினிக் திம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச்சுக்கு டொமினிக் திம் அதிர்ச்சி அளித்தார்.
2. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் எளிதில் வெற்றி
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜோகோவிச் எளிதில் வெற்றிபெற்றார்.
3. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
5. ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை: இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம்
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.