டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Italian Open Tennis: Rafael Nadal advanced to final

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 42-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.