டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Wimbledon Tennis Federer advanced to the 4th round

விம்பிள்டன் டென்னிஸ்பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
லண்டன், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 37 வயது ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 28-ம் நிலை வீரரான லூகாஸ் பொய்லியை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 2 மணி 6 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 7-5, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் லூகாஸ் பொய்லியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெடரர் பெற்ற 350-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் பெர்ரெட்டினி 6-7 (5-7), 7-6 (7-2), 4-6, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மனை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்று ஆட்டத்தில் பெடரர், பெர்ரெட்டினியை சந்திக்கிறார்.