டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு + "||" + Davis Cup tennis: Indian team announces

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா குரூப்1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக சுமித் நாகல் அணியில் சேர்க்கப்படவில்லை. சசிகுமார் முகுந்த் மாற்று வீரராக தேர்வாகி இருக்கிறார். இந்திய அணியில் உலக தரவரிசையில் 90-வது இடத்தில் உள்ள பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 184-வது இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், 271-வது இடத்தில் இருக்கும் சகெத் மைனெனி, இரட்டையர் தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள ரோகன் போபண்ணா, இரட்டையர் தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் திவிஜ் சரண் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக மகேஷ்பூபதியும், பயிற்சியாளராக ஜீஷன் அலியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சுற்று போட்டிக்கு தகுதி பெறும்.